[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத இயக்கங்களை ஒழிக்க வேண்டும்... பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வேண்டுகோள்

usa-request-to-pakistan

இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத இயக்கங்களை ஒழிக்குமாறு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

வாஷிங்டனில் பேசிய அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மார்க் டோனர், அண்டை நாடுகளை குறிவைத்து செயல்படும் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் அரசு ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், சில பயங்கரவாத இயக்கங்கள் பாகிஸ்தானின் உள்நாட்டு அமைதிக்கும் கேடு விளைவி‌த்து வருவதால், அவற்றையும் தடுக்க வேண்டும் என மார்க் டோனர் கோரிக்கை விடுத்தார்.

கடந்த காலங்களில் அமெரிக்க அரசின் வேண்டுகோளை ஏற்று, பாகிஸ்தான் அரசு சில நடவடிக்கைகளை எ‌டுத்திருப்பதாகவும் அந்த முயற்சியை பாராட்டுவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close