இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் மொலுக்காஸ் பகுதியையொட்டிய கடல்பகுதியில் நேற்றிரவு 9.47 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 45 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுலாவசி என்ற தீவிலும் நிலநடுக்கத்தின் பாதிப்புகள் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவுக்கு நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பதிவாகியிருந்ததாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக, ஆழிப்பேரலை எழும் என்ற அச்சம் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தோனேசியா அரசு மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மனாடோ என்ற நகரில் வீடுகள் மற்றும் கட்டடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டது. இதனால் அச்சமடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் திரண்டனர். மருத்துவமனைகளில் இருந்த நோயாளிகளும் உடனடியாக அங்கிருந்து வெளியேறி சாலைகளுக்கு வந்தனர்.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பாக, இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவில் நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 5 ரிக்டர் அளவுக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி ?
தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
“வேட்பு மனுக்களை பெற வேண்டாம்”- ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
“சபரிமலை குறித்த தீர்ப்பு இறுதியானதல்ல” - உச்சநீதிமன்றம்
உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு முதல்.. ட்ரம்ப் பதவிநீக்க தீர்மானம் வரை..