[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS அயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
  • BREAKING-NEWS விருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது
  • BREAKING-NEWS சிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது
  • BREAKING-NEWS தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மனித முகச் சாயலில் நீந்தும் ‘மெகா சைஸ் மீன்’ - வைரல் வீடியோ

fish-with-human-like-face-spotted-in-china-viral-video-creeps-people-out

மனித முகச் சாயலில் ஒரு மீன் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பொதுவாக மீனின் முகத்தை மாற்றி அதை வேறு வடிவங்களில் காட்டும் நடைமுறையை ஹாலிவுட் ஹாரர் படங்களில் பார்த்திருக்கலாம். ஆனால் அதை போன்று மீன் ஒன்று மனித முகச் சாயலில் இருப்பதை போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த மீன் நீரில் நீந்தும்போது தற்செயலாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த மீனை சீனாவில் உள்ள மியாவோ கிராமத்தில் ஒரு பெண் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதனை மைக்ரோப்ளாக்கிங் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் பதிவு செய்துள்ள வீடியோவில் மீனின் முகம் மனிதச் சாயலில் தென்படுகிறது. இதை போன்ற உருவத்தில் மீன் உள்ளது வழக்கமானதல்ல என்று தெரிய வந்துள்ளது. ஆகவே இதனைக் கண்ட  நெட்டிசன்கள் வேகமாக இதனை பரப்ப தொடங்கிவிட்டனர். 

மொத்தம் 14 செகண்ட் மட்டுமே ஓடக்கூடிய வீடியோவில் தென்படும் மீனின் முகம் மனித முகத்தில் இருப்பதைக் கண்டு ஆச்சரியமாக கருத்திட்டுள்ளனர். குறிப்பாக அதன் முகம் மற்றும் வாய், கண்கள் மனித சாயலில் உள்ளன. 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close