[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

பயங்கரவாதம் உலகிற்கு சவாலாக உள்ளது - பிரதமர் நரேந்திர மோடி

narendra-modi-kenya-speech-about-terrorism-global-warming

பயங்கரவாதம், புவி வெப்பமயமாதல் ஆகிய இரு பிரச்னைகள் உலகிற்கு சவாலாக இருப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டமாக கென்யாவிற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, தலைநகர் நைரோபியில் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. காசரானி விளையாட்டு மைதானத்தில்‌, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய சமூகத்தினர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.

ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரு குடும்பமாக கருத வேண்டும் என்று தெரிவித்த மோடி, அதனால்தான் இந்தியா - ஆப்பிரிக்கா நாடுகளின் உறவை பலப்படுத்த வேண்டும் என்று விரும்புவதாக குறிப்பிட்டார். பயங்கரவாதமும், புவி வெப்பமயமாதல் ஆகிய இரு பிரச்னைகளும்தான் உலகிற்கு சவாலாக விளங்குவதாக குறிப்பிட்ட பிரதமர், இதனை இளைஞர்களின் சக்தியால் எதிர்கொள்வோம் என்று தெரிவித்தார்.

கடந்த இரண்டாண்டுகளில் இந்தியாவில் பல இடங்களில் வறட்சி நிலவிய போதும் இந்தியா ஸ்திரமான வளர்ச்சியை அடைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close