[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது

காந்தி பயணித்த ரயிலில் பயணித்தார் பிரதமர் மோடி

modi-traveling-by-gandhi-traveled-train

தென்னாப்ரிக்காவின் டர்பன் நகரில் மகாத்மா காந்தி பயணித்த ரயிலில் பிரதமர் நரேந்திர மோடி பயணித்தார்.

நான்கு நாள் பயணமாக தென்ஆப்ரிக்கா சென்றுள்ள மோடி, வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பார்வையிட்டார். பீட்டர்ஸ்பெர்க்கில் காந்தி பயணித்த ரயிலில் பிரதமர் மோடி 15 நிமிடம் பயணம் மேற்கொண்டார். அவருடன் தென்ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமாவும் பயணம் செய்தார். இதனை தொடந்து காந்தியின் சத்யாகிரகப்போராட்டம் தொடங்கியதை நினைவு கூரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தையும் மோடி பார்வையிட்டார்.

பின்னர் 1893ம் ஆண்டு ரயிலில் இருந்து காந்தி தள்ளிவிடப்பட்டதை நினைவு கூர்ந்த பிரதமர், காந்தியும் நெல்சன் மண்டேலாவும் எதிர்கால சந்ததியினருக்கு தூண்டுகோலாக இருந்துவருவதாக குறிப்பிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close