[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி
  • BREAKING-NEWS இடஒதுக்கீடு விவரங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை நாடாளுமன்ற நடப்பு கூட்டத்தொடரில் பிரதமர் தாக்கல் செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நெல்லையில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டத்தை உருவாக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி
  • BREAKING-NEWS தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சவுதியில் பயங்கர விபத்து: புனித யாத்திரை சென்ற 35 பேர் உயிரிழப்பு

35-foreigners-dead-as-bus-crashes-with-excavator-in-saudi-arabia

சவுதி அரேபியாவில் நடந்த பேருந்து விபத்தில், புனித யாத்திரை மேற்கொண்ட 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சவுதி அரேபியாவுக்கு புனித யாத்திரை மேற்கொள்ள ஏராளமான வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதன்படி சென்ற வெளிநாட்டைச் சேர்ந்த 39 பேர் நேற்று ஒரு தனியார் பேருந்தில் புனித பயணம் மேற்கொண்டனர். அந்தப் பேருந்து, மதினாவில் இருந்து 170 கிமீ தூரத்தில் உள்ள அல் - அஹல் என்ற கிராமத்தின் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக லாரி ஒன்றின் மீது பயங்கரமாக மோதியது. இதில் பேருந்தில் இருந்த 35 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரும் மீட்பு படையினரும் காயமடைந்தவர்களை மீட்டு அல்ஹம்னா மருத்துவமனையில் சேர்த்தனர். உயிரிழந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை. 

இந்த கொடூர விபத்து பற்றி அறிந்த மதினா மாகாண ஆளுநரும் இளவரசருமான பைசன் பின் சல்மான் பின் அப்துல்லாஜிஸ், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close