[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

“ஜப்பானுக்காக பிரார்த்தனை செய்வோம்” - தாண்டவம் ஆடிய சூறாவளி

japan-hit-by-typhoon-hagibis-one-of-the-worst-in-60-years-two-dead

பேரிடர்களால் அவ்வப்போது சூறையாடப்படும் நாடுகளில் ஒன்றாக ஜப்பான் திகழ்கிறது. சில வருடங்களுக்கு முன்பு  பலமான சூறாவளிப் புயல் ஒன்று ஜப்பானை தாக்கியது. இதில் சுமார் 30 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன. கடந்த மாதம் கூட ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் கிழக்குப் பகுதியை ஒரு புயல் தாக்கியது. இந்நிலையில் மீண்டும் ஒரு சூறாவளி ஜப்பானை தாக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

          

இதற்கு காரணம் ஜப்பானில் வானம் ‘பிங்க்’ நிறமாக மாறியதாக சிலர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்தான். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் ஜப்பானில் 16 லட்சம் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 1,600 விமானங்கள் மற்றும் புல்லட் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி மத்திய டோக்கியோவில் கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் மூடப்பட்டிருக்கின்றன. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்தப் புயலை ஜப்பானியர்கள் கடந்த 1958-ஆம் ஆண்டு வந்த ‘கனோகவா’ சூறாவளிப் புயலுடன் ஒப்பிடுகின்றனர். இந்தப் புயல் வீசியபோது சுமார் 1200 பேர் ஜப்பானில் இறந்தனர். லட்சக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. அப்போது வானம் இதேபோன்று ‘பிங்க்’ நிறத்தில் மாறியதாக மக்களிடையே பேசப்பட்டது. இதனால் தற்போது அதேபோன்று பாதிப்பு வருமோ என மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். 

         

இந்நிலையில், ஹஜிபிஸ் புயலானது ஜப்பானை கடுமையாக தாக்கியுள்ளது. புயல் காற்றுடன் மழையும் கொட்டி தீர்த்தது. புயல் காற்றில் பல பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டன. கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனிடையே, #PrayForJapan என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. ஜப்பான் நாட்டிற்காக பிரார்த்தனை செய்யுமாறு பலரும் அதில் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த புயல் மற்றும் கனமழைக்கு இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

போட்டோ கேலரி

1 of 6

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close