[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS சென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது
  • BREAKING-NEWS தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை

ஜப்பானில் ‘பிங்க்’ கலரில் மாறிய வானம் - ‘கனோகவா’ சூறாவளி அச்சத்தில் மக்கள்?

typhoon-hagibis-prompts-evacuations-in-japan-as-sky-turns-purple

ஜப்பானில் திடீரென்று வானம் ‘பிங்க்’ நிறமாக மாறியதாக புகைப்படங்கள் பகிரப்பட்டு வரும் நிலையில், பெரும் சூறவாளி வரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரிடர்களால் அவ்வப்போது சூறையாடப்படும் நாடுகளில் ஒன்றாக ஜப்பான் திகழ்கிறது. சில வருங்களுக்கு முன்பு  பலமான சூறாவளிப் புயல் ஒன்று ஜப்பானை தாக்கியது. இதில் சுமார் 30 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன. கடந்த மாதம் கூட ஜப்பான் தலைநகர் டோக்கியாவின் கிழக்குப் பகுதியை ஒரு புயல் தாக்கியது. இந்நிலையில் மீண்டும் ஒரு சூறாவளி ஜப்பானை தாக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருப்பது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கு காரணம் ஜப்பானில் வானம் ‘பிங்க்’ நிறமாக மாறியதாக சிலர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்தான். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சோஃப் என்ற பெண் தனது ட்விட்டர் பக்கத்தில், சில மணி நேரங்களுக்கு முன்னர் வானம் பிங்க் நிறத்தில் மாறியது. ஒரு சூப்பர் சூறாவளி வருவதற்கான அறிகுறி தான் இது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஒரு அழகான காட்சி என்றும், ஒரு பேரழிவுவை இது ஏற்படுத்தப் போவதாகவும் கூறியுள்ளார். இதுபோன்று மேலும் சிலரும் பிங்க் நிற வானத்தை புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளனர்.

இதற்கிடையே ஜப்பான் வானிலை மையம் சார்பில் வெளியாகியிருக்கும் அறிவிப்பில், ஹசியோஜிமா ஐஸ்லாண்டின் தென்மேற்கு பகுதியிலிருந்து 320 கிலோ மீட்டர் தூரத்தில் அபாயகரமான சூறாவளிப் புயல் ஒன்று நிலை கொண்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்தச் சூறாவளி கரையை கடக்கும் போது 160 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நேற்று முதலே அங்கு பலத்த காற்று வீசியதுடன், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, ஒருவர் இறந்திருப்பதாகவும், 5 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் ஜப்பான் மீட்புக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஜப்பானில் 16 லட்சம் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 1,600 விமானங்கள் மற்றும் புல்லட் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி மத்திய டோக்கியாவில் கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் மூடப்பட்டிருக்கின்றன. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்தப் புயலை ஜப்பானியர்கள் கடந்த 1958ஆம் ஆண்டு வந்த ‘கனோகவா’ சூறாவளிப் புயலுடன் ஒப்பிடுகின்றனர். இந்தப் புயல் வீசிய போது சுமார் 1200 பேர் ஜப்பானில் இறந்தனர். லட்சக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. அப்போது வானம் இதேபோன்று ‘பிங்க்’ நிறத்தில் மாறியதாக மக்களிடையே பேசப்பட்டது. இதனால் தற்போது அதேபோன்று பாதிப்பு வருமோ என மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close