[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து
  • BREAKING-NEWS உத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

சாப்பாட்டில் முடி ! மனைவிக்கு மொட்டை போட்ட கணவன்

bangladeshi-man-shaves-wife-s-head-after-finding-hair-in-food-held

சாப்பாட்டில் முடி இருந்ததால் மனைவியின் தலை முடியை வெட்டிய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். 

வங்கதேசத்தின் வடமேற்கு பகுதியிலுள்ள ஜாய்புர்ஹட் பகுதியை சேர்ந்தவர் பப்லூ மொண்டல்(35). இவர் நேற்று காலை சாப்பிட்ட உணவில் முடி விழுந்துள்ளது. இதனையடுத்து கோபம் அடைந்த பப்லூ தனது மனைவியின் முடி முழுவதையும் கத்தியை எடுத்து வெட்டியதாக தெரிகிறது. 

இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். காவல்துறையினர் பப்லூ மொண்டலை கைது செய்தனர். இது குறித்து காவல்துறை தலைவர் ஷாரியர் கான், “பப்லூ தனது காலை உணவில் முடி விழுந்திருந்ததால் தனது மனைவியின் முடி முழுவதையும் கத்தியால் வெட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து நாங்கள் அவரை கைது செய்துள்ளோம். அவர் மீது  ‘தானாக கடுமையான காயத்தை ஏற்படுத்தும்’ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின் கீழ் அதிகபட்சமாக 14 வருடங்கள் சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.  

வங்கதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்கள் சமீபத்தில் அதிகரித்து உள்ளதாக அந்த நாட்டின் சமூக செயல்பாட்டாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் 19 வயது பெண் உயிருடன் எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட போது பெரும் போராட்டம் வெடித்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close