[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS கும்பகோணத்தில்‌ பாதாளச்சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தால் ஆண்டுக்கு 70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

லண்டன் அம்பேத்கர் மியூஸியத்தை மூட முடிவு : மகாராஷ்டிர அரசு எதிர்ப்பு

india-appeals-against-closure-of-london-s-ambedkar-museum

லண்டனில் உள்ள அம்பேத்கர் மியூஸியத்தை மூடும் முடிவுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

லண்டன் நகரின் வடமேற்குப் பகுதியில் உள்ள கிங் ஹென்றி சாலையில் அம்பேத்கர் மியூஸியம் செயல்பட்டு வருகிறது. இந்த மியூஸியத்தை கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தை வெளிப்படுத்தும் வகையிலும், அம்பேத்கர் இந்தியாவை மேம்படுத்தியதையும் பிரதிபலிக்கும் அடையாளமாக இந்த மியூஸியம் அமைக்கப்பட்டுள்ளது. 4 அடுக்கு கொண்ட இந்த கட்டடம் இந்திய அரசு சார்பில் வாங்கப்பட்ட பின்னர் அம்பேத்கர் சிலை, புகைக்கப்பட கண்காட்சி, நூலகம் ஆகியவற்றை உள்ளடக்கிய மியூஸியமாக மாற்றப்பட்டது. இந்த கட்டடத்தில் 1920ஆம் ஆண்டுகளில் அம்பேத்கர் மாணவராக இருந்த போது வசித்தார். 

தற்போது இந்தியர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் வந்து செல்லும் மியூஸியமாக இந்தக் கட்டடம் செயல்பட்டு வரும் நிலையில், வடமேற்கு லண்டன் அதிகாரிகள் மியூஸியத்தை மூடுவதற்கு முடிவு செய்துள்ளனர். மியூசியம் உள்ள சாலையில் வசிக்கும் மக்கள் சிலர், பார்வையாளர்கள் வந்து செல்வதை விரும்பவில்லை என தெரிவித்திருப்பதால் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக லண்டன் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

இந்நிலையில் மகாராஷ்டிர அரசு சார்பில் லண்டன் அதிகாரிகளின் முடிவுக்கு எதிராக இங்கிலாந்து அரசிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்துக்கும், அதிகாரிகளுக்கும் அனுப்பப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க, தனி அதிகாரி ஒருவரின் கீழ் செய்யுமாறு மத்திய அரசு முடிவு பரிந்துரைக்கவுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close