[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

தாக்குதல் நடத்தினால் போர் வெடிக்கும்: ஈரான் எச்சரிக்கை

iranian-foreign-minister-threatens-all-out-war-in-the-event-of-military-strikes

சவுதி அரேபிய எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் தங்கள் நாட்டின் மீது தாக்குதல் தொடுத்தால் பெரிய‌ அளவில் போர் வெடிக்கும் என ஈரான் எச்சரித்துள்ளது.

சவுதி அரேபியாவின் அராம்கோ எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது கடந்த சனிக்கிழமை ட்ரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கு கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதனிடையே ஈரான் தான் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக அமெரிக்கா திட்டவட்டமாக கூறி வருகிறது. 

இந்நிலையில் சவுதி அரேபிய எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் தங்கள் நாட்டின் மீது தாக்குதல் தொடுத்தால் பெரிய‌ அளவில் போர் வெடிக்கும் என ஈரான் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவத் ஷரீஃப்,

சவுதி அரேபியாவில் எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஈரான் மீது குற்றஞ்சாட்டி வரும் நாடுகள், எங்களின் மீது தாக்குதல் நடத்தினால், நாங்கள் கண்களை மூடிக்கொண்டிருக்க மாட்டோம். மிகப்பெரிய பதிலடி தாக்குதலை நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close