[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

இந்திய தேசிய கீதத்தை இசைத்த அமெரிக்க ராணுவ வீரர்கள் - வீடியோ

american-army-band-playing-indian-national-anthem

இந்திய தேசிய கீதத்தை அமெரிக்க ராணுவ வீரர்கள் இசைத்துள்ளனர். 

இந்தியா-அமெரிக்கா இடையே  ‘யுத்த அபியாஸ்’ (Exercise 'Yudhabhyas') என்ற பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஒத்திகை பயிற்சியில் இந்தியா-அமெரிக்கா ராணுவப்படைகள் இணைந்து பாதுகாப்பு குறித்து பயிற்சியில் ஈடுபடுவார்கள். இந்தாண்டு இப்பயிற்சி அமெரிக்காவிலுள்ள லூயிஸ் மேக்கார்டு தளத்தில் நடைபெற்றது. 


இந்த பயிற்சியின் போது அமெரிக்க ராணுவத்தினர் இந்திய தேசிய கீதத்தை இசைத்து காட்டி உற்சாகமடைந்தனர். இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில், “அமெரிக்க ராணுவத்தின் பண்ட் இசைக்குழு வீரர்கள் இந்தியாவின் தேசிய கீதத்தை உற்சாகமாக இசைக்கும் காட்சி பதிவாகியுள்ளது. 

முன்னதாக இந்தப் பயிற்சி ஒத்திகையின் போது இந்திய மற்றும் அமெரிக்க ராணுவப்படையினர் அசாம் ராணுவப் படையின் பாடலுக்கு மகிழ்ச்சியாக நடனமாடி உள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close