[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

லிபெரியா உறைவிடப் பள்ளியில் தீ விபத்து - 26 பேர் உயிரிழப்பு

26-children-die-as-fire-breaks-out-in-liberia-boarding-school

லிபெரியா நாட்டில் உள்ள உறைவிடப் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

லிபெரியா தலைநகர் மன்ரோவியாவில் மசூதியுடன் இணைந்த கட்டடம் ஒன்றில் உறைவிடப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் இரவு தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில்  குழந்தைகள் உள்பட 26 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த குழந்தைகள் சிலர் 10 வயதிற்கும் கீழானவர்கள் என தெரியவந்துள்ளது. இரண்டு ஆசிரியர்களும் உயிரிழந்திருக்கின்றனர்.

இதனிடையே தீ விபத்து நடந்த பள்ளியை லிபெரிய அதிபர், ஜார்ஜ் வீ பார்வையிட்டார். அத்துடன் உயிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close