[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

இந்தியாவின் லேண்டரை பார்த்தீர்களா? - விண்வெளி வீரரிடம் கேள்வி கேட்ட ஹாலிவுட் நடிக‌ர்

brad-pitt-asks-iss-astronaut-about-india-s-chandrayaan-2-lander-vikram

நிலவுக்கு இந்தியா அனுப்பிய லேண்டரை பார்த்தீர்களா என ஹாலிவுட் நடிக‌ர் பிராட் பிட் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வீரரிடம் கேட்டுள்ளார். 

நடிகர் பிராட் பிட் இவர் தனது அடுத்த ‌படமான ஆட் ஆஸ்ட்ராவின் பட விளம்பரத்துக்காக நாசாவின் தலைமையகத்துக்குச் சென்று விஞ்ஞானிகளிடம் உரையாற்றினார். அப்போது சர்வதேச விண்‌வெளி மையத்தில் உள்ள நிக் ஹேக் என்ற விண்வெளி வீரரிடம் வீடியோ கால் மூலம் பேசினா‌ர். விண்வெளி மையம் குறித்து பல்வேறு கேள்விகளை பிராட் பிட் கேட்டு தெரிந்து கொண்டார். 

விண்வெளி வீரர் கதாபாத்திரத்தில் யார் நம்பும்படியாக இருக்கிறார்கள்? தானா? அல்லது கிராவிட்டி திரைப்படத்தில் நடித்த பின் க்லூனியா? என நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார். அதற்கு சிரித்துக்கொண்டே பதில் அளித்த நிக், நிச்சயமாக நீங்கள் தான் என்று தெரிவித்தார்.

அப்போது இந்தியா அனுப்பிய விக்ரம் லேண்டர் குறித்தும் பிராட் பிட் கேள்வி எழுப்பினார். ''இந்தியா அனுப்பிய மூன் லேண்டரை பார்த்தீர்களா?'' என பிராட் பிட் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விண்வெளி வீரர் நிக், ''துரதிர்ஷடவசமாக அதனை நான் பார்க்கவில்லை'' எனத் தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close