[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

“ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலை”- உலக சுகாதார அமைப்பு தகவல்

one-suicide-in-every-40-seconds-who

உலக அளவில் ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார அமைப்பின்( WHO) புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

தற்கொலைகள் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக அதில் கூறப்பட்டுள்ளது. போர், கொலை மற்றும் மார்பகப் புற்றுநோய் ஆகியவற்றுக்கு பறிபோகும் உயிர்களைவிட தற்கொலைகள் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தற்கொலையும் குடும்பம், நட்பு மற்றும் சக ஊழியர்களை பாதிக்கச் செய்வதாக உலக சுகாதா அமைப்பின் அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதனாம் ஜிப்ரேயசஸ் தெரிவித்துள்ளார்.

2016-ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பேரில், தற்கொலை எண்ணிக்கை 10.5 பேருக்கு இருந்ததாகவும், எனினும் சில நாடுகளில் இது ஒரு லட்சம் பேருக்கு 5 பேர் முதல் 30 பேர் வரை இந்த எண்ணிக்கை வேறுபடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மக்கள்தொகை சீராக அதிகரித்து வந்துள்ள போதிலும், தற்கொலை எண்ணிக்கை கடந்த 2010 முதல் 2016 வரை ஒரே அளவில் நீடிப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பெரும்பாலான தற்கொலைகள் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் அதிகமுள்ள நாடுகளில் நடப்பதாகவும், தற்கொலைகள் அதிகம் நடக்கும் நாடுகள் வரிசையில் உகாண்டா, இலங்கை, தென்கொரியா, இந்தியா, ஜப்பான் ஆகியவை உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060)

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close