[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

''இந்தியாவுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை'' - பாக். வழக்கறிஞர்

tough-to-prove-kashmir-genocide-claim-pakistan-icj-lawyer

காஷ்மீரில் படுகொலை நடப்பதாக பாகிஸ்தான் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாத போது, சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியாவை சமாளிப்பது கடினம் என, பாகிஸ்தானுக்காக ஆஜராகும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதுடன், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், சர்வதேச நாடுகளின் உதவியை நாடியது. ஆனால், சீனாவை தவிர எந்த நாடுகளும் ஆதரிக்கவில்லை.

இதனால் விரக்தியடைந்த பாகிஸ்தான், சீனா உதவியுடன் ஐ.நா பாதுகாப்பு சபையில் முறையிட்டது. ஆனால், அங்கேயும் அந்நாட்டுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதையடுத்து, காஷ்மீர் விவகாரம் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறினார். 

இந்நிலையில், சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தானுக்காக ஆஜராகும் வழக்கறிஞர் கவார் குரேஷி, காஷ்மீரில் படுகொலை நடப்பதாக பாகிஸ்தான் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்றார். ஆதாரம் இல்லாத போது சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியாவை சமாளிப்பது கடினம் எனவும் காவர் குரோஷி கூறினார். இதனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close