[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

25 வயதில் கோடீஸ்வரரான இளைஞர் - அப்பாவின் தோல்வியை தூக்கி சுமந்த மகன் 

25-year-old-afghan-millionaire-mohammad-zahid-lost-it-all-but-built-it-back-up-again

25 வயதில் கோடீஸ்வரராக ஆப்கானிஸ்தான் இளைஞர் ஒருவர் வலம் வருகிறார். 

ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் முகமது சஹித்(25). இவர் 2006ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் ஐக்கிய அமீரகத்திற்கு குடி பெயர்ந்தார். இங்கு அவரின் தந்தை ஹசிம் கட்டிடம் மற்றும் எண்ணெய் தொடர்பான தொழிலை செய்து வந்தார். சஹித் தனது பள்ளிப்படிப்பை முடித்த போது அவருக்குப் பரிசாக ஆடி கார் ஒன்றை அவரது தந்தை பரிசாக அளித்தார். எனினும் சஹித் தனது கல்லூரி படிப்பில் மூன்றாம் ஆண்டு பயின்று கொண்டிருந்தப்போது அவரது தந்தையின் தொழில் கூட்டாளி ஒருவர்ஏமாற்றியதால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. 

இதனையடுத்து சஹித்தின் குடும்பம் முழுவதும் ஐக்கிய அமீரகத்திலிருந்து அயர்லாந்திற்கு சென்றது. எனினும் சஹித்திற்கு ஐக்கிய அமீரகம்தான் மிகவும் பிடித்திருந்தது. எனவே அங்கு மீண்டும் செல்ல வேண்டும் என்று அவர் நினைத்தார். ஆனால் ஒரு காலத்தில் பங்களா வீடு, சோகுசு கார் என அனைத்து வசதிகளுடனும் இருந்த இவரது குடும்பம், அப்போது இவை எதுவும் இன்றி இருந்தது. ஆகவே தனது உழைப்பால் இழந்தவை அனைத்தையும் மீண்டும் வாங்க சஹித் முடிவு செய்தார்.

இதற்காக அயர்லாந்திலுள்ள பல்கலைக் கழக்கத்தில் சர்வதேச தொழில் சார்ந்த பட்டப்படிப்பை பயின்றார். இதனைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு இவர் தனது குடும்பத்துடன் மீண்டும் ஐக்கிய அமீரகம் திரும்பினார். அப்போது இவர் தனது தந்தை செய்த கட்டுமான தொழிலை செய்யக் கூடாது என்று முடிவெடுத்தார். ஆகவே ஆன்லைன் முறையில் ஒரு தொழிலை தொடங்க திட்டமிட்டார். 

துபாய் நகருக்கு அதிக சுற்றுலா பயணிகள் வருவதால், அங்கு சொகுசு கார்களை வாடகைக்கு விடும் தொழிலை ஆரம்பிக்க திட்டமிட்டார். இதனை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய  ‘மைரைடு.ஏஇ’ என்ற இணையதள பக்கத்தை ஆரம்பித்தார். இந்தச் சேவையில் மிகவும் குறைந்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு சொகுசு காரை வாடகைக்கு கொடுத்து வந்தார். அத்துடன் அவர்களிடமிருந்து குறைந்த அளவிலான தொகையை முன்பணமாக பெற்றார். இந்தத் தொழிலில் நல்ல லாபம் வரத் தொடங்கியது. 

இதனைத் தொடர்ந்து ‘ட்ரிப்சி.ஏஇ’ என்ற டிராவல்ஸ் தொடர்பான இணையதள சேவையை ஆரம்பித்தார். இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் சுற்றுலாவிற்கான விமான டிக்கெட்டுகள் மற்றும் ஓட்டல் அறைகள் ஆகியவற்றை பதிவு செய்ய முடியும். இந்தத் தொழிலிலும் வெற்றி அடைந்த பிறகு மற்றொரு தொழிலை இவர் தொடங்கி அதிலும் சாதித்து வருகிறார். தனது 25வயதில் இவர் தற்போது மூன்று நிறுவனங்களுக்கு சிஇஓவாக உள்ளார். தற்போது இவரது தொழிகளின் மொத்த லாப மதிப்பு 12 மில்லியன் திர்ஹாமாக இருந்து வருகிறது. இந்தத் தொகை சுமார் இந்திய ரூபாய் மதிப்பில் 23 கோடியே 43லட்சம் ஆகும். இது கம்பெனியின் லாப தொகை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அமீரகம் நாட்டிற்கு மீண்டும் செல்ல வேண்டும் என்ற ஆசையால் தனது குடும்பத்தை சரிவிலிருந்து மீட்ட இளைஞர். தற்போது குறைந்த வயதில் கோடீஸ்வரராகி சாதனை படைத்துள்ளார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close