[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

“இந்தியாவுடன் அக்டோபர், நவம்பரில் போர் நடக்கும்” - பாக். அமைச்சர் பேச்சு

pakistan-minister-predicts-full-blown-war-with-india-in-october-november

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அக்டோபர் மாதம் போர் நடக்கும் என தான் கணித்துள்ளதாக பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் பேசியுள்ளார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ராவல்பாண்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டின் ரயில் அமைச்சர் ஷேக் ரஷித் அகமது பங்கேற்று பேசினார். அப்போது, “காஷ்மீருக்கான இறுதி சுதந்திர போராட்டம் வந்துள்ளது. இதற்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் போர் நடக்கலாம். 

இந்த முறை போரில் இந்தியா தோல்வி அடையும். ஐநாவின் பாதுகாப்பு ஆணையம் காஷ்மீர் விவகாரத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீர் பகுதியில் உள்ள மக்களுக்கு நாம் துணை நிற்க வேண்டும். முஹரம் பண்டிகைக்கு பிறகு நான் மீண்டும் காஷ்மீர் செல்வேன். இனிமேலும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்பவர்கள் முட்டாள்கள். சீனா நம்முடன் நட்பு நாடாக துணை நிற்பது நம் அதிர்ஷ்டம்” என்று கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close