[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

இன்று தொடங்குகிறது ஜி7 மாநாடு: அமேசான் காட்டுத் தீ குறித்து முக்கிய விவாதம்

what-to-expect-from-the-2019-g7-summit-in-biarritz

ஜி-7 உச்சி மாநாடு பிரான்ஸ் நாட்டில் இன்று தொடங்குகிறது. பாலின பாகுபாடு, வறுமை, அமேசான் காட்டுத் தீ உள்ளிட்டவை முக்கியமாக விவாதிக்கப்படுகின்றன.

பிரான்ஸ் நாட்டை ஒட்டியுள்ள பிஸ்கே விரிகுடா பகுதியில் அமைந்து அழகான நகரம் பையாரிட்ஸ். சுற்றுலாத்தலத்துக்கு சிறந்த இடமாக கருதப்படும் இங்குதான் ஜி-7 உச்சிமாநாடு நடைபெறுகிறது. மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டில் பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன், கனடா, இத்தாலி ஆகிய நாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உலக பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், அந்நிய வர்த்தகத்தில் சுதந்திரங்கள், பாதுகாப்பு, பாலின பாகுபாடு போன்றவற்றை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன. அமேசான் அடர்வனத்திற்குள் காட்டுத் தீ பற்றி எரிந்தது குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் விவாதிக்க திட்டமிட்டுள்ளார். இது சர்வதேச பிரச்னையாக அறிவிக்கப்பட இருக்கிறது.

நீண்ட நாள் பிரச்னையாக இருக்கும் பாலின பாகுபாடு குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவேண்டும் என அங்குள்ள பெண்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. இதை வலியுறுத்த ஸ்வாரஸ்யமான வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் அவென்ஜர்ஸ் கதாபாத்திரத்தில் வலம் வந்து தங்களின் நிலைப்பாட்டை தெரிவிக்கின்றனர். 

பெண்களும், சிறுமிகளும் வறுமையின் பிடியில் இருப்பதாகவும் கல்வியறிவில் பின்தங்கிய அவர்களை மீட்டெடுக்க ஜி-7 மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டும் என்பதை இந்த வீடியோ விளக்குகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஜி-7 மாநாட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் மாசடைவதில் இருந்து தடுக்க நகரம் முழுவதும் ஹைட்ரஜன் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கார்பன்-டை-ஆக்சைடை குறைவாக வெளியேற்றும் இந்த ஹைட்ரஜன் பைக்களை பயன்படுத்த செய்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

‌ஒரு பக்கம் சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் மாநாட்டையொட்டி சில கவன ஈர்ப்பு போராட்டமும் நடைபெற்று வருகிறது. பையாரிட்ஸ்நகரில் இயங்கிவரும் அமெரிக்காவின் புகழ்பெற்ற Monsanto எனப்படும் ரசாயண உரம் தயாரிக்கும் தொழில்சாலையை மூட வேண்டும் என்ற போராட்டம் வலுத்துள்ளது. விவசாய நிலங்கள் தொழிற்சாலையாக மாற்றப்பட்டு வருவதை எதிர்க்கும் விதமாக சாலையில் மணலைக் கொட்டி செடிகளை நட்டனர். போராட்டம் தொடரும் என்பதால் பையாரிட்ஸ் நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close