[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் சந்திக்கவுள்ள மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் மனு
  • BREAKING-NEWS சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு. பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்.
  • BREAKING-NEWS 7 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

காஷ்மீர் குறித்து பிரதமர் மோடியிடம் பேசுவேன் - டிரம்ப்

kashmir-situation-explosive-and-complicated-says-trump

காஷ்மீர் விவகாரம் குறித்து இந்திய பிரதமர் மோடியுடன் நேரில் பேச உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் இவ்வார இறுதியில் நடைபெறும் ஜி 7 நாடுகளின் கூட்டத்தில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாகவும் அப்போது காஷ்மீர் விவகாரம் குறித்து அவருடன் பேச உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோருடன் டிரம்ப் தொலைபேசியில் பேசியிருந்தார். 

இதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை டிரம்ப் நேற்று சந்தித்தார். அப்போது பேசிய அவர் இந்தியா - பாகிஸ்தான் இடையே தற்போதுள்ள பிரச்னை மிகத்தீவிரமானது என்றும் இதில் மதமும் சம்மந்தப்பட்டிருப்பதால் மிகவும் சிக்கலானது என்றும் டிரம்ப் தெரிவித்தார். இந்த சூழலில் இவ்விரு நாடுகளுடனுடனும் தங்களுக்கு நல்லுறவு இருப்பதாகவும் எனவே மத்தியஸ்தம் செய்து வைக்கவும் தயார் என்றும் டிரம்ப் தெரிவித்தார். 

காஷ்மீர் விவகாரத்தில் 3ம் தரப்பு தலையீடு தேவையில்லை என்பது இந்தியாவின் திட்டவட்டமான கொள்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவ்விவகாரத்தில் உலக நாடுகள் தலையிட வேண்டும் என பாகிஸ்தான் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close