[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க வீரரை இடித்த விவகாரத்தில் விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம்
  • BREAKING-NEWS சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு
  • BREAKING-NEWS கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

சிட்னி நகரில் கத்தியால் தாக்குதல்: இளம் பெண் உயிரிழப்பு!

sydney-incident-man-arrested-over-stabbings-in-city-centre

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வாலிபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். சிலர் காயம் அடைந்தனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரின் பிசியான பகுதி சிட்டி சென்டர் ஏரியா. இங்கு மக்கள் பரபரப்பாக தங்கள் வேலை களுக்காக இன்று சென்று கொண்டிருந்தனர். அப்போது  வாலிபர் ஒருவர் கத்தியுடன் சாலையில் கண்டவர்களை எல்லாம் சரமாரியாக தாக்கினார். பின்னர் கார் ஒன்றின் மிது ஏறி நின்று கொண்டு, குதித்தார். அங்கும் இங்குமாக ஓடினார். அவரை பொதுமக்களில் சிலர் பிடிக்க முயன்றனர். அப்போது அவர் ’அல்லாஹு அக்பர்’ என்றும் ’என்னை சுடுங்கள்’ என்று கூறிய தாகக் கூறப்படுகிறது.

பின்னர் அங்கிருந்தவர்கள் சாதுரியமாக செயல்பட்டு அந்த வாலிபரை சேர் ஒன்றால் விழச் செய்து அமுக்கி பிடித்தனர். அவரி டம் இருந்த கத்தியையும் பிடுங்கினர். பின்னர் வந்த போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். அந்த வாலிபர் பிடிபட்ட இடத்தின் அருகே, 21 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்திருந்தார். அவரை, இவர் கொன்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

சிலர் காயமடைந்துள்ளனர். எதற்காக இப்படி செய்தார் என்பது பற்றி அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
இந்த சம்பவம் சிட்னி நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close