[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

காஷ்மீர் விவகாரம் : இந்திய அரசின் நடவடிக்கைக்கு சீனா எதிர்ப்பு

china-issues-warning-against-india-s-bid-to-make-ladakh-union-territory

ஜம்மு-காஷ்மீரை பிரித்து லடாக் யூனியன் பிரதேசம் அமைத்தற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு நேற்று ரத்து செய்து உத்தரவிட்டது. அத்துடன் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்க உள்ளது. அதன்படி ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசமாக புதிதாக உருவாக உள்ளது. 

இந்நிலையில் லடாக் யூனியன் பிரதேசம் உருவாக்கியது தொடர்பாக சீனா கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சூயுங், “இந்தியா சீனாவின் எல்லை பகுதிக்குள் ஊடுருவதற்கு சீனா எப்போதுமே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அந்த நிலைப்பாட்டில் எப்போதுமே சீனா உறுதியாக உள்ளது. எனினும், சமீபத்தில், சீனாவின் இறையாண்மையை சீர்குலைக்கும் வகையில், இந்தியா தன்னுடைய சட்டவிதிகளை மாற்றி அமைத்துள்ளது. இதனை சீனா ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது. ஆகவே இந்திய அரசு எல்லை விவகாரத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். அத்துடன் இருநாடுகளுக்கு இடையேயான எல்லை ஒப்பந்தத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் இந்தியா நடந்து கொள்ளவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

சீனாவின் இந்த கருத்து குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் பதிலளித்துள்ளார். அதில், “ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இந்திய நாடு எந்த ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்திலும் தலையிட்டு கருத்து தெரிவிக்காது. அதேபோல இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்திலும் மற்ற நாடுகள் தலையிட்டு கருத்து கூறக்கூடாது என்று இந்தியா எதிர்பார்க்கிறது. அதேபோல இந்திய-சீனா எல்லை ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளும் நேர்மையான முறையில் ஆலோசித்துதான் இதனை ஒத்துக்கொண்டுள்ளது” எனக் கூறியுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close