[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

பறக்கும் இயந்திரம் மூலம் ஆங்கிலக் கால்வாயை கடந்து சாதனை

flying-man-tries-to-cross-channel-again-on-jet-powered-flyboard

பிரான்ஸில் ராணுவ வீரர் ஒருவர், தானே உருவாக்கிய பறக்கும் இயந்திரம் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனைப் படைத்துள்ளார்.

ஃபிராங்கி ஸபாட்டா என்பவர் இந்த இயந்திரத்தை கண்டுபிடித்து, அதில் பறந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். ஜெட் தொழில்நுட்பத்து‌டன் வடிவமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான இயந்திரத்தில் நின்றபடி ஃபிராங்கி புறப்பட்டதைக் காண சாங்கட்டே பகுதியில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். தெற்கு இங்கிலாந்தையும் வடக்கு பிரான்சையும் பிரிக்கும் ஆங்கிலக் கால்வாயைக் அவர் கடந்து செல்லும் காட்சியை பார்வையாளர்கள் வியப்புடன் பார்த்தனர். 

ஏற்கனவே கடந்த மாதம் 25ஆம் தேதி, ஆங்கிலக் கால்வாயைக் கடக்க ஃபிராங்கி ஸபாட்டா மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இருப்பினும் மனந்தளராத அவர், இரண்டாவது முயற்சியில் வெற்றி கண்டுள்ளார். அவருக்கு, ஏராளமானோர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close