[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை அவதிக்குள்ளாக்க வேண்டும் என்பதே அமலாக்கத்துறையின் எண்ணம் - கபில் சிபல்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

கனடாவின் பீல் நகர தலைமை போலீஸ் அதிகாரியாக தமிழர் நியமனம்!

nishan-duraiappah-appointed-peel-regional-police-chief

கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள பீல் (Peel) பிராந்திய தலைமை போலீஸ் அதிகாரியாக, தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் பீல் பிராந்தியத்தின் புதிய தலைமை போலீஸ் அதிகாரியாக, ஹால்டன் பிராந்தியத்தில் டெபுடி போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த நிஷான் துரையப்பாவை, நியமித்துள்ளனர். போலீஸ் துறையில் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு பதவிகளை வகித்துள்ள நிஷான் துரையப்பா, அக்டோபர் 1 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இவர் இலங்கை தமிழர். 

‘’3000 காவலர்களை கொண்டுள்ள பீல் பிராந்திய போலீஸுக்கு தலைமை அதிகாரியாக பணியாற்றுவது உண்மையிலேயே பெருமையான விஷயம். சிறப்பாக கடமையாற்று வேன்’’ என்று தெரிவித்துள்ளார் நிஷான்.  அவரை பீல் நகரத்துக்குட்பட்ட மிஸிஸிசவ்ஹா மேயர், போன்னி கிரோம்பி வரவேற்றுள்ளார். நகரத்தை பாதுகாப்பாக வைத்துகொள்ள இணைந்து செயலாற் றுவோம் என்றும் தெரிவித்துள்ளார். 

நிஷான், யாழ்பாண முன்னாள் மேயர் ஆல்பிரட் துரையப்பாவின் பேரன் என்பதும் மூன்று வயதில் பெற்றோருடன் கனடா வில் குடியேறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close