[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

மேகத்தை கிழித்தபடி தரையிறங்கும் ’எமிரேட்ஸ்’: வைரல் வீடியோ!

emirates-a380-landing-through-clouds-goes-viral

மேகத்தை கிழித்தபடி எமிரேட்ஸ் விமானம் தரையிறங்கும் சிலிர்க்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

உலகின் சிறந்த விமான சேவைக்காக சமீபத்தில் விருது பெற்ற நிறுவனம் எமிரேட்ஸ். ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று சமீபத்தில் மேகத்தை கிழித்தபடி தரையிறங்கியது. மிகப்பிரமாண்டமாக மேகத்தில் இருந்து வெளிவரும் காட்சி, ரசிக்கும் படியாக அமைந்துள்ளது.

இந்த விமானக் காட்சியை எமிரேட்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள் ளது. பதிவிட்டப்பட்ட இந்த வீடியோ, அடுத்த சில நொடிகளிலேயே இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவை ஏராளமானோர் கண்டு களித்துள்ளனர். ’மேகங்களின் ராணி’ என்றும் விமானியை பாராட்ட வேண்டும், மிரட்டல், பிரமாண்டம், அழகு, ஆச்சரியம் என்றும் பலர் தங்கள் கருத்துக்களை அதில் தெரிவித்துள்ளனர். 

இருந்தாலும் அந்த வீடியோ காட்சி எங்கு எடுக்கப்பட்டது என்ற விவரம் எதுவும் அதில் குறிப்பிடப்பட வில்லை. என்றாலும் பிரிட்டீஷின் பட்ஜெட் விமானமான ஈசிஜெட் ஏர்லைன்ஸ், வீடியோவில் காணப்படுவதால் இங்கிலாந்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close