[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

அன்புக்கு எல்லையில்லை : இரு நாட்டு குழந்தைகள் விளையாட சீசாக்கள்

no-there-are-no-longer-seesaws-at-the-u-s-mexico-border

எந்த ஒரு அரசு நினைத்தாலும் மக்களையும் அவர்களிடையிலான அன்பையும் பிரிக்க முடியாது என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில் அமெரிக்காவில் எல்லை சுவர்களில் சீசாக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மெக்சிகோ எல்லை வழியே அகதிகள் என்ற போர்வையில் சமூகவிரோதிகள் நுழைவதால், அதனை தடுக்கும் பொருட்டு எல்லையில் சுவர் கட்ட வேண்டுமென அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். குடியேற்றக் கொள்கைகளையும் கடுமையாக்கியுள்ளார். இந்த சூழலில் எந்த எல்லை சுவரும் மக்களை பிரிக்க முடியாது என நிரூபிக்கும் வகையில் அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் உள்ள எல்லை தடுப்பில் சீசாக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

கலிபோர்னியாவை சேர்ந்த இருவர் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் ஒருபுறம் எல்லைக்கு அப்பால் மெக்சிகோவில் உள்ள குழந்தைகளும் இதில் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். இருநாட்டு மக்களிடம் குறிப்பாக மெக்சிகோ எல்லையில் காத்திருக்கும் அகதிகளிடம் இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close