[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

சவுதி அரேபிய இளவரசர் பந்தர் காலமானார்

saudi-king-salman-s-elder-brother-prince-bandar-dies-at-96

சவுதி அரேபியாவின் இளவரசரும் தற்போதைய மன்னர் சல்மானின் மூத்த சகோதரருமான பந்தர் பின் அப்துல்லா அஜிஸ் காலமானார். அவருக்கு வயது 96.

மறைந்த சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா அஜிஸ் அல் சவுத்தின் மூத்த மகனான இளவரசர் பந்தர் பின் அப்துல்லா அஜிஸ், 1923 ஆம் ஆண்டு பிறந்தவர். தற்போதைய மன்னர் சல்மானின் மூத்த சகோதரரான இவர், எந்த பதவியையும் ஏற்காமல் இருந்தவர்.

ஆனால், இவர் மகன்கள் முக்கிய பதவிகளை வகித்து வருகின்றனர். இவர் மகன் ஃபைசல் பின் பந்தர், ரியாத் ஆளுநராக இருக்கிறார். மற்றொரு மகன் அப்துல்லா பின் பந்தர், தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைவராகவும் மற்றொரு மகன் காலித் பின் பந்தர், மன்னர் சல்மானின் ஆலோசகராகவும் பணியாற்றுகின்றனர்.

இளவரசர் பந்தர், கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரபு நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close