[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட முன்னாள் நீதிபதி: நீதிமன்றத்தில் அதிர்ச்சி

ex-ohio-judge-dragged-from-court-after-being-ordered-to-be-taken-into-custody

அமெரிக்க நீதிமன்றத்தில் முன்னாள் நீதிபதி ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் ஒஹியோ மாநில நீதிமன்றத்தில் சிறுவர்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியாக இருந்தவர் டிரேஸி ஹன்டர். இவரது சகோதரர் ஸ்டீபன், தான் பணியாற்றிய இடத்தில் டீன் ஏஜ் வயதுடைய ஒருவரை தாக்கியதாக வழக்கு நடந்தது. இந்த வழக்கில் தன் பதவியை பயன்படுத்தி, ஸ்டீபனுக்கு சாதகமாக டிரேஸி தீர்ப்பளித்தாராம்.

இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. டிரேஸி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப் பட்டது. மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தபோது, அவரை காவலில் எடுத்து விசாரிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் ஹண்டர் அங்கிருந்து நகர மறுத்ததால், அவரை காவல்துறையினர் தரதரவென இழுத்துச்சென்றனர். முன்னாள் நீதிபதி ஹண்டரை விடுதலை செய்ய வேண்டும், அவர் குற்றவாளி அல்ல என ஹண்டரின் ஆதரவாளர்கள் நீதிமன்றத்தில் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close