[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்
  • BREAKING-NEWS அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?
  • BREAKING-NEWS சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

‘குண்டுப்பெண்கள் சொர்க்கத்துக்கு போகமாட்டார்களா?’ - பாதிரியாரை தாக்கிய பெண்!

priest-says-fat-women-won-t-go-to-heaven-woman-knocks-him-off-the-stage

மேடையில் பேசிக் கொண்டிருந்த பாதிரியாரை பெண் ஒருவர் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

பிரேசிலில் உள்ள சர்ச் ஒன்றில் அப்பகுதியில் புகழ்பெற்ற பாதிரியாரான மார்சிலோ ரோஸி  உரையாற்றிக் கொண்டிருந்தார். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அவரின் உரையைக் கேட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது பேசிய பாதிரியார், ''குண்டுப்பெண்கள் சொர்க்கத்துப் போகமாட்டார்கள்'' என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக மேடையில் ஏறிய குண்டுப்பெண் ஒருவர், பாதிரியாரை பலமாகத் தாக்கி மேடையில் இருந்து கீழே தள்ளிவிட்டார். இதை சற்றும் எதிர்பாராத பாதுகாவலர்கள் உடனடியாக ஓடிச்சென்று பாதிரியாரை தூக்கினர். தாக்கிய பெண்ணையும் பிடித்து வைத்தனர். தாக்குதலுக்கு பின் பேசிய பாதிரியார், ''கவலைப்பட வேண்டாம். நான் நல்லா இருக்கிறேன். லேசான வலி மட்டும் இருக்கிறது. வேறு ஒன்றும் பிரச்னை இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.

பாதிரியாரை தாக்கிய பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அப்பெண்ணின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். பாதிரியார் புகார் எதுவும் தெரிவிக்காததால் கைது செய்யப்பட்ட பெண் விடுதலை செய்யப்பட்டார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close