[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

ஒரு கப் 'டீ'யின் விலை ரூ.13,800! அப்படி என்னதான் ஸ்பெஷல்?

hotel-near-buckingham-palace-serves-200-cup-of-tea

பிரிட்டனின் பக்கிங்காம் அரண்மனைக்கு எதிரே உள்‌‌ள ஒரு உணவ‌கத்தில் ஒரு கோப்பை தேநீர் 13 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை‌ செய்யப்படுகிறது.

வெயில் காலமோ, குளிர்காலமோ பெரும்பாலனவர்களுக்கு சூடாக டீயோ, காபியோ குடிக்கவில்லை என்றால் வேலையே ஓடாது. இன்னும் சிலருக்கு காலையில் எழுந்தவுடனே டீ குடித்தால்தான் அன்றைய தினமே முழுமை பெறும். அந்த அளவிற்கு தேநீர் மோகம் மக்களிடையே தொற்றிக்கொண்டுள்ளது.


 


ஆனால், ஒரு கோப்பை தேநீர் 13 ஆயிரத்து 800 ரூபாய் என்றால் டீ பிரியர்கள் சற்று அதிர்ச்சிக்குத்தான் உள்ளாவார்கள். பிரிட்டனின் பக்கிங்காம் அரண்மனைக்கு எதிரே உள்‌‌ள ஒரு உணவ‌கத்தில் ஒரு கோப்பை தேநீர் 13 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை‌ செய்யப்படுகிறது. லண்டனில்‌ உள்ள பக்கிங்காம் அரண்மனைக்கு எதிரே உள்‌‌ள தி ரூபென்ஸ் என்ற உணவகத்தில் ஒரு கோப்பை தேநீர் ‌‌200 டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த உணவகத்திற்கு‌‌‌ வரும் வாடிக்கையாளர்களுக்கு வெள்ளைக் குடுவையில் தேநீர் பரிமாறப்படுகிறது. 

இலங்கையிலிருந்து கொண்டு வரப்படும் பிரத்யேக தேயிலையால் உருவாக்கப்படும் இந்த தேநீர் உள்ளூர்வாசிகளை மட்டுமின்றி சுற்றுலாப்‌ பயணி‌களையும் வெகுவாக‌ கவர்ந்துள்‌ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close