[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

உலகிலேயே மிக செங்குத்தான சாலை இதுதான்!

welsh-street-takes-world-s-steepest-title

பிரிட்டனின் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு சாலை உலகிலேயே மிக செங்குத்தான சாலை என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

நியூசிலாந்தின் டியூண்டின் (dunedin) பகுதியில் இருந்த பால்ட்வின் சாலை தான் செங்குத்தான சாலை என்ற சாதனையை தக்க வைத்திருந்தது. 35 சதவிகித அளவுக்கு அந்த சாலை செங்குத்தாக இருந்தது. இந்த சாதனையில் நியூசிலாந்தை பின்னுக்குத் தள்ளி செங்குத்தான சாலை என்ற புதிய சாதனையை படைத்திருக்கிறது பிரிட்டனின் வேல்ஸ் மாகாணத்தின் பெருமை வாய்ந்த ஹார்லெச் நகரத்தில் உள்ள ஒரு சாலை. 

இந்த நகரத்தின் போர்ட் பென் லெச் என்ற சாலை 37.5 சதவிகிதம் செங்குத்தாக இருப்பதை கடந்த 6ம் தேதி கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தினர் உறுதி செய்தனர். இதையடுத்து, இப்பகுதியை சேர்ந்த மூத்த குடிமக்களிடம் அதற்கான கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. 33 அடி அகலத்திலும், இரு பக்கங்களிலும் வீடுகள் அமைந்திருக்கும் சாலைக்கு மட்டுமே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close