[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

மனைவியரை தோளில் சுமந்தபடி ஓடும் போட்டி - எடைக்கு நிகரான 'பீர்' பரிசு

lithuanian-couple-defends-world-wife-carrying-championship-title

பின்லாந்து நாட்டில் மனைவியரை தோளில் சுமந்தபடி ஓடும் விநோதப் போட்டி நடைபெற்றது.

1992ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்த போட்டியில் கணவர்களை தங்களது மனைவியரை, தோளில் சுமந்தபடி, ஓடும் வழியில் வைக்கப்பட்டுள்ள தடைகளைத் தாண்டி ஓட வேண்டும். இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, போலந்து, பிரிட்டன், உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமான தம்பதியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் ஒரு சிலர் இடறிவிழுந்தனர். இந்தப் போட்டியில் லித்துவேனியா நாட்டைச் சேர்ந்த தம்பதி சாம்பியன் பட்டத்தை வென்றது. 

போட்டியில் வெற்றி‌ பெற்ற தம்பதிக்கு மனைவியின் எடைக்கு நிகரான பீர் வழங்கப்பட்டது. மனைவியைத் தோளில் சுமந்தபடி ஓடுவது ஒரு சுகமான அனுபவம் என்று கணவன்மார்கள் கூறினர். கணவன்கள் தங்கள் வலிமையைக் காட்டுவதற்காக மனைவிகளைத் தூக்கிக்கொண்டு ஓடும் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close