[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து.
  • BREAKING-NEWS வேதாரண்யத்தில் இரண்டு தரப்பினரிடையே மோதல்: காவல்நிலையம் மீது கல்வீச்சு
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் கங்கையம்மன் கோயில் குளத்தில் கிடந்த மர்மப் பொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு.
  • BREAKING-NEWS தமிழகத்தில் எந்த விதத்திலும் தீவிரவாதம் தலைதூக்க முடியாது: ஜெயக்குமார்
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

குஞ்சுக்கு சிகரெட் துண்டை உணவா‌க கொடுத்த தாய் பறவை 

bird-feeding-chick-cigarette-end-captured-in-picture

பறவை ஒன்று தன் குட்டிக்கு சிகரெட் துண்டை உணவா‌க கொடுக்கும் புகைப்படம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவைச் சேர்ந்த பறவைகளை புகைப்படம் எடுப்பவரான கரேன் மேசன், கடந்த வாரம் ஃபுளோரிடா கடற்கரையில் பறவைகளை படம்பிடித்து கொண்டிருந்தார். அப்போது பிளாக் ஸ்கிம்மர் பறவை ஒன்று தன் குட்டிக்கு உணவு கொடுப்பதை படம்பிடித்துள்ளார். 

பின்னர் அந்தப் படத்தை பார்த்த போது, தாய் பறவை எடுத்து வந்தது உணவில்லை மீதமாக வீசப்பட்ட சிகரெட் துண்டு எனத் தெரிய வந்துள்ளது. இந்தப் படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர் தயவுசெய்து புகைபிடித்தால் மீதமிருப்பதை கீழே வீசிச் செல்லாதீர் எனக் கூறியுள்ளார். 

அவரது இந்தப் புகைப்படம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மனிதர்களின் புகைப்பழக்கம் பறவைகளையும் பாதிக்கிறது என்பதை உணர்த்துகிறது இந்தப் புகைப்படம். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close