லண்டனில், பறக்கும் விமானத்தில் இருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கென்ய தலைநகர் நைரோபியில் இருந்து லண்டன் ஹீத்ரு விமான நிலையத்துக்கு கென்ய ஏர்வேஸ் விமானம் ஒன்று கடந்த ஞாயிற்றுக் கிழமை வந்துகொண்டிருந்தது. இந்த விமானத்தில் கியர் பாக்ஸ் அருகே ஒருவர் ஒளிந்து அமர்ந்தபடி, பயணித்துள்ளார். லண்டன் விமான நிலையத்தை விமானம் நெருங்கிய நிலையில் கியர் பாக்ஸை விமானி இறக்கியுள்ளார். அப்போது அதில் மறைந்திருந்த நபர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். அவர் கீழே விழுந்த இடம் கிளாபம், ஆபர்டான் சாலை அருகே உள்ள தோட்டம்.
‘’நான் என் வீட்டில் சூரிய குளியலில் ஈடுபட்டிருந்தேன். ஏதோ சத்தம் கேட்டது. தோட்டத்தில் எட்டிப் பார்த்தேன். ரத்த வெள்ளத்தில் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். அவர் இறந்து கிடந்த பகுதிக்கு அருகில் இருந்த சுவரில் ரத்தம் தெறித்திருந்தது. இதையடுத்து பக்கத்து வீட்டுக்காரரும் வந்து பார்த்தார். அவர் நடுங்கிவிட்டார்’’ என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்தார். இதையடுத்து அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், கென்ய ஏர்வேஸின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, விமானத்துக்கு எந்த சேதமும் இல்லை. விமானத்தின் கியர் பெட்டியில் ஒரு பை, தண்ணீர் மற்றும் உணவைக் கண்டுபிடித்துள்ளோம். நைரோபியில் இருந்து 8 மணி நேரம் பயணம் செய்து, லண்டன் வந்து உயிரிழந்த அந்த நபருக்கு ஆழ்ந்த இரங்கல்’’ என்று தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர் யார் என்று அடையாளம் காணும் பணியில் லண்டன் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோன்று விமானத்தில் இருந்து விழுந்து உயிரிழப்பது இது முதல் முறையல்ல. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜோகன்னஸ்பர்கில் இருந்து பிரிட்டீஸ் ஏர்வேஸில் வந்த இருவர் லண்டனின் ரிச்மண்ட் பகுதியில் கீழே விழுந்து உயிரிழந்தனர். 2012 ஆம் ஆண்டு, கேப்டவுணில் இருந்து வந்த விமானத்தில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.
மிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி
'ராமருக்கு கோயில் கட்டும் வேளையில் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள்' காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு
ஊழல் புகார்: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு
“நித்தியானந்தாவி்ன் பாஸ்போர்ட்டை ரத்து செய்துள்ளோம்” - வெளியுறுவுத்துறை அமைச்சகம்
“எங்களது துப்பாக்கியையே எடுத்து மிரட்டினர்” - என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் விளக்கம்