[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா வருகை

india-us-relation-issues-ahead-of-us-secretary-of-state-visit-to-india

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ இன்று இந்தியா வருகிறார்.

3 நாள் பயணத்தில் பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை பாம்பியோ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இறக்குமதி வரி விதிப்பு தொடர்பான பிரச்னைகள், பாதுகாப்பு, எச் 1 பி விவகாரம் உள்ளிட்டவை குறித்து இச்சந்திப்பில் பேசப்படும் எனத் தெரிகிறது. 

வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் ஜப்பானில் நடைபெறும் ஜி 20 நாடுகளின் கூட்டத்திற்கு இடையே அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் அதற்கு முன்னதாக இச்சந்திப்பு நடைபெற உள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையே பதற்ற நிலை அதிகரித்து வரும் நிலையில் இது குறித்து சவுதி அரேபிய மன்னருடன் பாம்பியோ பேசினார். இதைத் தொடர்ந்து அவர் இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close