[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற கூட்டத் தொடர் நீட்டிப்பு? - மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS தோனியிடம் தேர்வுக்குழு பேச வேண்டும்: ஓய்வு விவகாரம் பற்றி சேவாக்!
  • BREAKING-NEWS கடத்தப்பட்ட குழந்தை '10 மணி' நேரத்தில் மீட்பு - வீட்டு பணிப்பெண் காதலனுடன் கைது
  • BREAKING-NEWS டி.என்.பி.எல். தொடர் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS விடிய விடிய தர்ணா - கர்நாடக சட்டப்பேரவையில் படுத்துறங்கிய எடியூரப்பா

அமெரிக்காவில் 51 மாடி கட்டிடத்தில் மோதிய ஹெலிகாப்டர்!

certified-pilot-killed-in-fiery-new-york-skyscraper-crash-identified

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள 51 மாடி கட்டடத்தில் ஹெலிகாப்டர் மோதி தீப்பிடித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

நியூயார்க்கில் உள்ள மான்ஹாட்டன் நகரில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டரை மேகோர்மேக் (McCormack ) என்பவர் இயக்கினார். ஹெலிகாப்டர் பறக்க தொடங்கிய 11 நிமிடத்தில் அருகில் இருந்த 51 மாடி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள் ளானது. இதில் மேகோர்மேக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக அங்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் பயங்கரவாத நோக்கம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை என்றும் மோசமான வானிலை காரணமாக இவ்வாறு நடந்திருக்கலாம் என்றும் நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ குவாமோ தெரிவித்துள்ளார். எனினும் இந்நிகழ்வு குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். 

51 மாடி கட்டடத்தில் ஹெலிகாப்டர் மோதியவாறு தரையிறங்கிய நிலையில் அக்கட்டடத்திற்குள் இருந்தவர்கள் அவசரமாக வெளியேற்றப் பட்டனர். இது மிகப்பெரிய அசம்பாவிதம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

இந்நிகழ்வு 2001ம் ஆண்டு இரட்டை கோபுர தாக்குலை போல ஒரு பயங்கரவாத தாக்குதலா என்ற அச்சமும் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close