[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு

துபாயில் பேருந்து விபத்து: 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் உயிரிழப்பு

dubai-bus-accident-8-indians-among-17-dead-in-the-bus-crash

துபாயில் நடந்த பேருந்து விபத்தில், 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஓமனில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிவிட்டு சுமார் 31 பேர் பேருந்தில் துபாய்க்கு  திரும்பிக் கொண்டிருந்தனர். ஓமன் அரசுக்குச் சொந்தமான அந்த பேருந்தில் இருந்தவர்கள் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள். 

இந்தப் பேருந்து, துபாயின் தெற்கு பகுதியில் உள்ள அல் ரஷிதியா என்ற இடத்தில் நேற்று மாலை 5.45 மணிக்கு வந்துகொண்டிருந்தது. அப்போது, பாதை மாறி மெட்ரோ ரயில் ஸ்டேஷனுக்கு செல்லும் பாதையில் வேகமாக சென்றது. அது பேருந்துக்கான பாதை அல்ல. கார்கள் மட்டுமே செல்ல முடியும். இதனால் கனரக வாகனங்கள் செல்வதை தடுக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்த தடுப்பில், வேகமாக சென்ற பேருந்து மோதியது.

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுபற்றி ஐக்கிய அரபி அமீரக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘’8 இந்தியர்கள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். மருத்துவ மனையில் 4 இந்தியர்கள், காயத்துக்கு சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். 3 இந்தியர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினரை, தூதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டு, தேவையான உதவிகள் செய்வதாக தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர்களை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. அவர்கள், ராஜகோபாலன், பெரோஸ்கான் பதான், ரேஷ்மா பெரோஸ்கான், தீபக் குமார், ஜமாலுதீன் அரக்காவீட்டில், கிரண் ஜானி, வாசுதேவ், திலக்ராம் ஜவஹர் தாகூர் என்று கூறப்பட்டுள்ளது. இதில் 6 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் 4 பேர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close