[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

'பைக் டேங் மீது அமர்ந்து செல்லும் மாடு - வைரலாகும் வீடியோ

pakistani-man-spotted-riding-motorcycle-with-a-cow-sitting-in-front-of-him-video-goes-viral

பைக்கில் மாட்டை அமர வைத்துக்கொண்டு ஒருஇளைஞர் சாலையில் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பைக்கில் செல்லப்பிராணிகளை அமர வைத்துக்கொண்டு செல்வது சாதாரண நிகழ்வு தான். நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை எளிதில் அமர வைத்துக்கொண்டு சென்றுவிடலாம். ஆனால் உருவத்தில் மிகப்பெரிய மாட்டை பைக்கில் அமர வைத்துக்கொண்டு செல்ல முடியுமா? அப்படி, மாட்டை அமர வைத்துக்கொண்டு பைக்கில் சென்ற வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு மாட்டை பெரிய போர்வையால் போர்த்தி தன்னுடைய பைக்கின் டேங்க் மீது அமர வைத்தவாறு பைக்கை ஓட்டிக்கொண்டு சாலையில் செல்கிறார். சாலையில் வந்த யாரோ அதனை செல்போனில் வீடியோ எடுக்க அது தற்போது வைரலாக பரவி வருகிறது.

''இது நிச்சயம் விலங்கை துன்புறுத்தும் நடவடிக்கை'' என்றும், ''ஆபத்தை உணராமல் இளைஞர் சாலையில் பயணம் செய்கிறார்'' என்றும்  பலர் கண்டங்களைப் பதிவிட்டு வருகின்றனர். அதே வேளையில் ''இதெல்லாம் பாகிஸ்தானில் மட்டுமே நடக்கும். அவர்களால் தான் இதுபோன்றெல்லாம் யோசிக்க முடியும்'' என்றும் கிண்டல் கருத்துகளும் பதிவிட்டு வருகின்றனர்

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close