[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

ஓவியம் மூலம் கிராமத்தை காப்பாற்றிய 97 வயது வானவில் தாத்தா...

97-year-old-grandpa-saves-village-by-painting-buildings-with-colorful-art

97 வயது முதியவர் ஒருவர் தன்னுடைய ஓவியம் மூலம் அவரது கிராமத்தை காப்பாற்றியுள்ளார். 

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு 86 வயது முதியவர் ஹூவாங் யங்ஃபு ஒரு சங்கடத்தை எதிர்கொண்டார். அதாவது தைவான் அரசு அவரது கிராமத்தில் உள்ள வீடுகளை அழித்து விட்டு புதிய மார்டனான அபார்மெண்ட் காம்ப்ளக்ஸ் கட்ட இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. 

இதற்காக தைவான் அரசு அவர்களுக்கு வேறு இடம் பார்த்து குடியேற பணம் வழங்க முடிவு செய்தது. ஆனால் அங்கு இருக்கும் சிலருக்கு அங்கிருந்து செல்ல மனம் வரவில்லை. அதில் ஹூவாங்க் யங்ஃபுவும் ஒருவர். 

இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், முதன் முதலாக ஓவியம் வரையத் தொடங்கினார். முதலில் தனது வீட்டின் சுவரில் பறவை ஒன்றை வரைந்தார். பின்னர், பூனை, புறா, என தனது ஓவியத்தை விரிவுப் படுத்தினார்.  

மேலும் அந்த கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளின் சுவர்களிலும் பெயிண்டிங் வரைய ஆரம்பித்தார். அதற்கான பணத்தையும் அவரே செலவு செய்தார். அந்த கிராமமே வண்ணமயமாக மாறியது. 

இதையடுத்து 2010 ஆம் ஆண்டு அப்பகுதி பல்கலைகழக மாணவர்கள் அந்த கிராமத்திற்கு வந்துள்ளனர். அப்போது ஹூவாங் யங்ஃபு கதையை கேட்டு அவருக்கு உதவ முன்வந்தனர். அந்த கிராமத்தை புகைப்படம் எடுத்து அவை அழிக்கப்படாமல் இருக்க மனு செய்து முறையிட்டனர். 

இது ‘வானவில் தாத்தா’ என்ற பெயரில் வைரலானது. இதைத்தொடர்ந்து அந்த கிராமத்தை பார்வையிட அனைத்து தரப்பினரும் விருப்பம் காட்டினர். நாளடைவில் அது சுற்றுலாத்தளமாக மாறியது. தற்போது ஒரு வருடத்திற்கு ஒரு மில்லியன் சுற்றுலாப்பயணிகள் அப்பகுதிக்கு வருகை புரிகின்றனர். 

தைவான் அரசு தற்போது அந்த கிராமத்தை அழிக்க மாட்டோம் என உறுதியளித்துள்ளதாகவும் அதற்காக நன்றி தெரிவித்து கொள்வதாகவும் ஹூவாங் யங்ஃபு தெரிவித்துள்ளார். மேலும் “40 வருடத்திற்கு முன்பு 1200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு இருந்தன. ஆனால் பலர் இங்கிருந்து இடம் பெயர்ந்துவிட்டனர். பாதி பேர் இயற்கை எய்தினர். தற்போது சில வீடுகள் மட்டுமே இங்கு உள்ளது” எனத் தெரிவிக்கிறார். 

வானவில் தாத்தா என்று அழைக்கப்படும் ஹூவாங் யங்ஃபு சீனாவில் பிறந்தவர். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு 2 மில்லியன் பேர் தைவானுக்கு குடிபெயர்ந்தனர். அப்போது ராணுவ வீரர்களும் அவர்களது குடும்பங்களும் தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட கிராமம்தான் இந்த வானவில் கிராமம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close