[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கால்களால் விமானம் ஓட்டும் பெண் விமானி: தன்னம்பிக்கையின் மறுபெயர் ஜெஸ்ஸிகா!

jessica-cox-is-inspiring-women-in-aviation-around-the-world

அமெரிக்காவின் தென் மேற்கு பகுதியான அரிசோனாவைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் விமானம் ஓட்டுகிறார். இதில் என்ன ஆச்சரியம்? என்று கேட்டால், அந்தப் பெண்ணுக்கு இரண்டு கைகளும் இல்லை. தன்னுடைய கால்களால் விமானத்தை ஓட்டி உலக பெண்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக திகழ்கிறார்.

அரிசோனாவைச் சேர்ந்த விமானி ஜெஸ்ஸிகா கோக்ஸ். மற்ற விமானியைப் போலவே இவரும் விமானம் ஓட்டுகிறார். ஒரே மாறுதல் என்னவென்றால் கைகளுக்கு பதிலாக கால்களை பயன்படுத்துகிறார்.

பிறக்கும் போதே ஜெஸ்ஸிகாவுக்கு இரண்டு கைகளும் இல்லை. அவரைக் கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். குறிப்பாக ஜெஸ்ஸிகாவின் தாய் மனமுடைந்தே போய்விட்டார். ஆனாலும் ஜெஸ்ஸிகாவை முழு சுதந்திரத்துடனும், தன்னம்பிக்கையுடனும் வளர்த்துள்ளார். சிறு வயதில் ஒரு விமானத்தின் ஓட்டுநர் இருக்கை அருகே அமர்ந்து செல்லும் வாய்ப்பு ஜெஸ்ஸிகாவுக்கு கிடைத்துள்ளது. அப்போது முதல் விமானத்தின் மீது தீராக்காதல் கொண்டுள்ளார் ஜெஸ்ஸிகா. 

தனது மேற்படிப்புக்கு பிறகு விமானம் ஓட்டும் பயிற்சியில் இறங்கியுள்ளார். அது அவ்வளவு எளிதானதாக இல்லை. சரியாக பயிற்சியாளர், சரியான பயிற்சி விமானம் எல்லாம் கைகூட வேண்டி இருந்தது. கடும் பயிற்சிக்கு பிறகு 2008ம் ஆண்டு லைட் ஸ்போர்ட் விமானத்தை இயக்குவதற்கான சான்றிதழை பெற்றார் ஜெஸ்ஸிகா.

ஜெஸ்ஸிகா விமானியாக மட்டுமில்லை. தன்னம்பிக்கையூட்டும் பேச்சாளராகவும் இருக்கிறார். பல மேடைகளில் தன்னுடைய தன்னம்பிக்கை பேச்சால் பலரையும் ஊக்கப்படுத்தி வருகிறார். கார் ஓட்டுதல், சமையல், கராத்தே என அனைத்து துறைகளிலும் ஜெஸ்ஸிகா ஒரு ரவுண்ட் வருகிறார்.

இது குறித்து கூறிய ஜெஸ்ஸிகா, எனது வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டது. எனது வாழ்க்கையை நான் என் போக்கில் வாழ விரும்பினேன். எனக்கு பல முன்னுதாரணமான ஆட்கள் இருக்கிறார்கள். வரும் தலைமுறைக்கு நானே முன்னுதாரணமாக இருக்க வேண்டுமென நினைத்தேன் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close