[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

இலங்கையில் சமூகவலைதளங்கள் மீண்டும் முடக்கம்

sri-lanka-blocks-social-media-platforms-after-muslim-shops-mosques-attacked

இலங்கையில் சில‌ வழிபாட்டு தலங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் நிகழ்த்தப்பட்ட நிலையில் அங்கு சமூகவலைதளங்கள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன. 

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக தவறான தகவல்கள், பேஸ்புக் உள்ளிட்ட‌ சமூக வலைதளங்களில் பரவியதாக சொல்லப்படுகிறது. தவறான தகவலை நம்பி பலரும் ஜிலா பகுதியில் உள்ள மசூதி மீதும், வர்த்தக நிறுவனங்கள் மீதும் கற்‌கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து காவல்துறையினரும் ராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர். ஊரடங்கு உத்தரவும் போடப்பட்டது. மேலும் இலங்கை தாக்குதல் தொடர்பாக பல வதந்திகள் சமூக வலைதளங்களில் மூலமே பரவுவதாக கூறப்படுகிறது. 

இந்த சூழலில் இலங்கையில் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களை முடக்கி தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையக் குழு உத்தரவிட்டுள்ளது. பேஸ்புக்கில் வன்முறையை தூண்டும் விதத்திலும், போலி செய்தியின் பதிவுகளையும் பதிவிட்ட சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் நாளன்று இலங்கையில் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர். 500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதனையடுத்து இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களையும் அந்நாட்டு அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close