[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

சிறந்த டாப் 10 பட்டியலில் ஐதராபாத் விமான நிலையம்!

hyderabad-s-airport-among-top-10-airports-in-the-world

இந்த ஆண்டுக்கான டாப் 10 சிறந்த விமான நிலையங்கள் மற்றும் மோசமான விமான நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் 8 வது இடத்தை பெற்றுள்ளது.

விமான நிலையங்களில் பயணிகளின் உரிமை, விமானம் ரத்து மற்றும் தாமதத்துக்கு இழப்பீடு, சேவை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு ஏர்ஹெல்ப் என்ற நிறுவனம் ஒவ்வொரு வருடமும் சர்வதேச விமான நிலையங்களை பட்டியலிட்டு வருகிறது. இந்த வருடத்துக்கான பட்டியலில், அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி ஹப் விமான நிலையம் மிகவும் மோசமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தார் ஏர்வேஸ் இந்த வருடமும் சிறந்த விமானமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

டாப் 10 சிறந்த விமான நிலையங்கள்:

1. ஹமாத் சர்வதேச விமான நிலையம், கத்தார்
2. டோக்யோ சர்வதேச விமானநிலையம், ஜப்பான்
3. ஏதன்ஸ் சர்வதேச விமான நிலையம், கிரீஸ்
4. அபோன்சோ பெனா சர்வதேச விமான நிலையம், பிரேசில்
5. கிடான்ஸ்க் லெக் வாசா விமானநிலையம், போலந்து
6. ஷெரமெட்யெவொ சர்வதேச விமான நிலையம், ரஷ்யா
7. சாங்கி விமான நிலையம், சிங்கப்பூர்
8. ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம், இந்தியா- ஐதராபாத்
9. டெனரிஃ வடக்கு விமானநிலையம், ஸ்பெயின்
10. விராகோபோஸ்/கம்பினாஸ் சர்வதேச விமான நிலையம், பிரேசில்.

டாப் 10 மோசமான விமான நிலையங்கள்:


1. காட்விக் விமான நிலையம் லண்டன்
2. பில்லி பிஷப் டொரன்டோ சிட்டி விமான நிலையம், கனடா
3. போர்டோ விமான நிலையம், போர்ச்சுக்கல்
4. பாரிஸ் ஒர்லி விமான நிலையம், பிரான்ஸ்
5 மான்செஸ்டர் விமானநிலையம், இங்கிலாந்து
6. மால்டா சர்வதேச விமான நிலையம், மால்டா
7. ஹென்றி கோண்டா சர்வதேச விமானநிலையம், ரோமானியா
8. எயிந்தோவன் விமான நிலையம், நெதர்லாந்து
9. குவைத் சர்வதேச விமான நிலையம், குவைத்
10. லிஸ்பன் போர்டெலா விமான நிலையம், போர்ச்சுக்கல்

டாப் 10 ஏர்லைன்ஸ்:
1. கத்தார் ஏர்வேஸ்
2. அமெரிக்கன் ஏர்லைன்ஸ்
3. ஏரோமெக்சிகோ
4. எஸ்ஏஎஸ் ஸ்கேண்டினவியன் ஏர்லைன்ஸ்
5. குவாண்டஸ்
6. லாடம் ஏர்லைன்ஸ்
7. வெஸ்ட் ஜெட்
8. லக்ஸ் ஏர்
9. ஆஸ்ட்ரியன் ஏர்லைன்ஸ்
10. எமிரேட்ஸ்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close