[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

பப்ஜி விளையாட அனுமதி மறுத்த கணவர்: விவாகரத்து கேட்டார் மனைவி

uae-woman-seeks-divorce-from-husband-after-he-stops-her-from-playing-pubg

பப்ஜி விளையாட அனுமதி மறுத்த கணவரிடம் இருந்து, இளம் மனைவி விவாகரத்து கேட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அவ்வப்போது ஏதாவது ஒரு மொபைல் கேம் வந்து, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போடும். சமீபத்தில் அப்படி எல்லோரையும் கட்டிப் போட்டிருக்கிறது பப்ஜி என்ற மொபைல் விளையாட்டு. பள்ளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர். மணமேடையிலேயே, மணமகன் பப்ஜி விளையாடும் அளவுக்கு இந்த விளையாட்டு அடிமைபடுத்தி வைத்திருக்கிறது ஆட்களை! சில மாநிலங்களில் இந்த விளையாட்டுக்குத் தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது. 

இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பப்ஜி விளையாடக் கூடாது என்று சொன்ன கணவரிடமிருந்து விவகாரத்து கேட்டிருக்கிறார் இளம் மனைவி. அங்குள்ள அஜ்மான் நகர போலீஸ் அதிகாரி, வாஃபா கலீல் அல் ஹோசானி இதை உறுதிப் படுத்தியுள்ளார். 

இருபது வயது இளம் பெண்ணான அவர் எப்போதும் பப்ஜி விளையாடிக் கொண்டிருக்கிறார். இதை கணவர் கண்டித்துள்ளார். அவரால் விளையாட்டை விட முடியவில்லை. கணவர் கடுமையாக நடந்து கொள்ள, அந்தப் பெண் கணவரை கைவிட முடி வெடுத்து, விவாகரத்து கேட்டிருக்கிறார்.

தான் விரும்பும் பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும் உரிமை தனக்கு இருப்பதாக வும் பப்ஜியை தனது நண்பர்களுடனும் உறவினர்களுடமே விளையாடுவதாகவும் அந்த இளம் பெண் தெரிவித்துள்ளார். கணவர் தனக்கு எந்த சுதந்திரத்தையும் தரவில்லை என்றும் அவர் புகார் கூறியிருக்கிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close