[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்; எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது - பிரதமர் மோடி

இந்தியா - பாக்., உறவுச் சிக்கலே பிராந்திய அமைதிக்கு பெரிய பிரச்னை - இம்ரான்கான்

ties-with-india-only-problem-for-peace-in-region-says-imran-khan

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவுச்சிக்கல் மட்டுமே பிராந்தியத்தின் அமைதிக்கும், நிலையான தன்மைக்கும் பெரிய பிரச்னையாக இருப்பதாக பாக்., பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவி வந்தது. தற்போது சற்று பதட்டம் குறைந்திருந்தாலும் இரு நாடுகளுக்கு இடையே சுமூகமான போக்கு இல்லை. இந்நிலையில் இந்திய- பாகிஸ்தான் உறவுச்சிக்கல் குறித்து பாக்., பிரதமர் இம்ரான்கான் பேசியுள்ளார். 

சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள சீன சர்வதேச கலாச்சார தொடர்பு மையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இம்ரான்கான் உரையாற்றினார். அதில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவுச்சிக்கல் மட்டுமே பிராந்தியத்தின் அமைதிக்கும், நிலையான தன்மைக்கும் பெரிய பிரச்னையாக இருப்பதாக தெரிவித்தார். 

மேலும் பேசிய அவர், ''பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலையான தன்மை இல்லாமல் பாகிஸ்தானால் பொருளாதார வளர்ச்சி பெற முடியாது. எனவே அதை அடைவதற்கான இலக்கை நோக்கி நாங்கள் பயணிக்கிறோம். இந்தியாவில் நடந்து வரும் மக்களவைத் தேர்தல் முடிந்த பின் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்பட வழி ஏற்படும் என நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close