[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

சீனாவில் இருக்கும் 200 உற்பத்தி நிறுவனங்களை இந்தியாவுக்கு மாற்ற அமெரிக்கா திட்டம்

about-200-us-companies-seeking-to-move-manufacturing-base-from-china-to-india

அமெரிக்காவைச் சேர்ந்த 200 உற்பத்தி நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்ற திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

அமெரிக்க பொருட்களுக்கு சீனாவில் 25% வரி விதிக்கப்படும் நிலையில் சீன பொருட்களுக்கு அமெரிக்காவில் வெறும் 2.5% மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. இதனை அடுத்து சீன பொருட்களுக்கு மொத்த அளவில் வரி விதிக்க முடிவு எடுத்திருப்பதாக அமெரிக்கா அறிவித்தது. இது 4 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து சீனாவும் வரியை அதிகப்படுத்தியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகப்போர் நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அமெரிக்காவைச் சேர்ந்த 200 உற்பத்தி நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்ற திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க - இந்திய திட்டமிடல் மற்றும் ஒத்துழைப்புக்கான ஆலோசனைக் குழு இந்த தகவலை தெரிவித்துள்ளது.  

இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேசிய அந்த அமைப்பின் தலைவர் முகேஷ் அக்கி, ''சீனாவுடனான வர்த்தகப்போர் காரணமாக அமெரிக்கா இந்தியா மீது கவனம் செலுத்துகிறது. இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து அமெரிக்க நிறுவனங்கள் எங்களிடம் ஆலோசனை கேட்கின்றன. இந்தியாவில் முதலீடு செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்கா கருதுகிறது. 

அமெரிக்க முதலீடுகளை கவர இந்திய அரசும் புதிய சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். வரி, இடம் வழங்குவது உள்ளிட்ட சில விவகாரங்களில் இந்திய அரசு சாதகமான வழிகளை வழங்க வேண்டும். அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவை தேர்வு செய்யும்பட்சத்தில் இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உருவாகும்'' எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close