[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 215 ஆக உயர்வு

srilanka-bomb-blast-215-dead

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்வங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது. இதில், இந்தியாவைச் சேர்ந்த மூவர் உள்பட 27 வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.

ஏசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்ட நேற்று, இலங்கையின் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. காலை 8.45 மணி முதல் 9.05 மணிக்குள் 6 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. தலைநகர் கொழும்புவில் உள்ள, ஷாங்கரி லா நட்சத்திர விடுதி, கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர்கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், கிங்ஸ்பெரி மற்றும் சின்னமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களிலும் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பலர் பங்கேற்றிருந்த நிலையில், அவர்கள் உடல்சிதறி உயிரிழந்தனர்.

பிற்பகல், 1.45 மணியளவில் தெஹிவளையில் தேசிய உயிரியல் பூங்கா அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலிலும் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதல் சம்பவங்களில் இதுவரை 215 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 4‌50-க்கும் அதிகமானோர், பல்வேறு மருத்து‌மனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில், இந்தியா, போர்ச்சுக்கல், துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close