[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

வரலாற்று சிறப்புமிக்க பிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கர தீ!

notre-dame-main-structure-saved-macron-vows-to-heal-heart-of-paris

பாரிசில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நோட்ரே டேம் தேவாலயத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் தேவாலயத்தின் மேற்கூரை எரிந்து முற்றிலும் சாம்பலானது.

பிரான்ஸ் தலைநகர், பாரிஸில் உள்ளது, நோட்ரே டேம் தேவாலயம். 850 வருட பழமையான இந்த தேவாலயம் பாரம்பரியாகச் சின்னமாக திகழ்கிறது. வருடம் தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்த தேவாலயத்தை பார்த்துச் செல்கிறார்கள்.

ஐரோப்பிய கட்டிட கலைக்கு சிறந்த எடுக்காட்டாக விளங்கும் இத்தேவாலயம் 69 மீட்டர் உயரமுள்ள இரண்டு கோபுரங்களை கொண்டுள்ளது. 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தில், புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் தேவாலயத்தின் மேற்கூரைப் பற்றி எரிய ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக பரவிய தீ, தேவாலயம் முழுவதும் பற்றியது. இதில் தேவாலயத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இதையடுத்து அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் பத்திரமாக வேறு இடத்துக்கு அப்புறப்படுத்தப் பட்டனர். சுமார் 400 தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் தீயை அணைக்க போராடினர். கடும் போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்பு துறை அதிகாரி ஜீன்-கிளாட் காலெட் தெரிவித்துள்ளார்.

பழமையான தேவாலயம் தீக்கிரையானது அந்நாட்டு மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடி யாகத் தெரியவில்லை. 

இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட பல தலைவர்கள் தீ விபத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close