[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை: எழுந்து நின்று கைதட்டிய அமெரிக்க எம்.பிக்கள்

modi-speech-usa

அமெரிக்கா நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில், பலத்த கரகோஷங்களுக்கு இடையே, பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குறிப்பிட்டதுபோல், இயற்கையாக அமைந்த உறவு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு என்பது, ஆசியாவிலிருந்து, ஆப்பிரிக்கா வரையிலும், இந்திய பெருங்கடலிலிருந்து, பசிபிக் பெருங்கடல் வரையிலும், அமைதி, வளர்ச்சி, ஸ்திரத்தன்மையை உருவாக்குவதாக இருக்கும். இதன் மூலம், கடலோர வழித்தடங்களை ஆதரமாக கொண்டு நடைபெறும் வணிகத்திற்கான பாதுகாப்பிற்கும், கடல் எல்லைகளை சுதந்திரமாக கடந்து செல்வதற்கும் உதவிடும்.

லக்ஷ்ர் இ - தொய்பா, தலிபான், ஐ.எஸ்.ஐ.எஸ் என பயங்கரவாதத்தின் பெயர்கள்தான் மாறியிருக்கின்றதே தவிர, அவற்றின் கொள்கைகள் ஒன்றே என்றார் பிரதமர் மோடி. பயங்கரவாத நடவடிக்கைகள் இந்தியாவின் அண்டை நாட்டால்தான் பேணி பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்படுவதாக கூறி, பாகிஸ்தான் மறைமுகமாக சாடினார்.

பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் போது, 66 முறை அமர்ந்தும், 8 முறை எழுந்து நின்றும், அமெரிக்க எம்.பிக்கள் கைதட்டி, ஆர்ப்பரித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close