[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார் - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை - அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு
  • BREAKING-NEWS வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றது - கிழக்கு இந்திய பெருங்கடல்- தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் 66 பேர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.34 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலையில் மாற்றமின்றி, டீசல் விலை 8 காசுகள் அதிகரித்து விற்பனை
  • BREAKING-NEWS சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை- பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளும் தீவிர சோதனை

“இந்தியாவுடன் பேச்சு தொடங்க இது நல்ல தருணம்” - பாக். பிரதமர் இம்ரான் கான்

received-a-message-from-pm-modi-tweets-imran-khan-on-eve-of-pakistan-national-day

பிரதமர் மோடியின் வாழ்த்துச்செய்திக்கு நன்றி தெரிவித்துள்ள பாக். பிரதமர் இம்ரான் கான், இந்தியாவுடன் பேச்சு தொடங்க இது ஒரு நல்ல தருணமாக கருதுவதாக தெரிவித்துள்ளார்.

1940ஆம் ஆண்டில் மார்ச் 23 அன்று முதன்முதலாக பாகிஸ்தானுக்கு தனிநாடு முன்மொழியப்பட்டது. அதனைக்கொண்டாடும் விதமாகவும் லாகூர் ஒப்பந்தத்தை நினைவுகூரும் வகையிலும் ஆண்டுதோறும் மார்ச் 23-ந்தேதி பாகிஸ்தான் தேசியதினம் கொண்டாடப்படுகிறது. 

அதன்படி இன்று தேசிய தினம் கொண்டாடும் பாகிஸ்தானுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளார். பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் ''தேசிய தினம் கொண்டாடும் பாகிஸ்தான் மக்களுக்கு எனது வாழ்த்துகள். துணை கண்டத்தில் பயங்கரவாதம் மற்றும் வன்முறையின்றி ஜனநாயகம், அமைதி மற்றும் செல்வசெழிப்புடன் மக்கள் இணைந்து வாழும் நேரம் இது'' என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் வாழ்த்து செய்திக்கு பாக். பிரதமர் இம்ரான்கான் நன்றி தெரிவித்துள்ளார். அதில் ‘‘இந்தியாவுடன் பேச்சு தொடங்க இது ஒரு நல்ல தருணமாக கருதுகிறேன். அதன்மூலம் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும். இருநாட்டு மக்களுக்கும் இடையே அமைதி, வளமையுடன் கூடிய புதிய உறவு தேவை’’ என்று தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே இணக்கமான போக்கு இல்லாத நிலையில் இரு நாட்டு பிரதமர்களின் பரஸ்பரமான வாழ்த்துகளும், இரு நாட்டு பிரச்னைகள் தொடர்பான கருத்துகளும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close