[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS முன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS ரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு

விமான விபத்து: ’போயிங்’ பறக்க சிங்கப்பூரும் தடை!

singapore-to-ground-all-boeing-737-max-8-planes

எத்தியோப்பிய விமான விபத்தை அடுத்து, 'போயிங் 737 மேக்ஸ்-8' ரக விமானங்களை சிங்கப்பூர் அரசும் நிறுத்தியுள்ளது.

எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா நகரில் இருந்து எத்தியோப்பிய ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான போயிங் 737 விமானம் 149 பயணிகள், 8 ஊழியர்களுடன் கென்யா தலைநகர் நைரோபிக்கு புறப்பட்டது. பத்து நிமிடத்திலேயே விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானத் தில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர்.

ஐந்து மாதங்களில் போயிங் ரக விமானம் இரண்டாவது முறையாக விபத்தை சந்தித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் லயன் ஏர் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 189 பேர் உயிரிழந்தனர். தற்போது எத்தியோப் பியாவில் இரண்டாவது விபத்து நிகழ்ந்துள்ளது. இரண்டு விபத்துமே ஒன்று போலவே நடந்துள்ளதாலும் இரு விமானங்களுமே போயிங் ரகத் தை  சேர்ந்தவை என்பதாலும் இந்த விமானத்தின் பாதுகாப்பு குறித்து பல்வேறு நாடுகள் அச்சம் அடைந்துள்ளன.

இதையடுத்து ‘போயிங் 737 மேக்ஸ்-8' ரக விமானங்கள் அனைத்தையும் எத்தியோப்பியா நிறுத்தியது. அதே போல சீனா, இந்தோனேஷியா, கேமேன் தீவுகள் உள்ளிட்ட நாடுகள், போயிங் ரக விமானங்களின் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. அதன் பாதுகாப்பு அம்ச ங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. 

இந்தியாவில், ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனங்கள் இந்த ரக விமானங் களைப் பயன்படுத்தி வருகின்றன. இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், இந்த ரக விமானங்களை இயக்க விமானிக்கு குறைந்தது ஆயிரம் மணி நேரம் அனுபவம் வேண்டும் என்றும் துணை விமானிக்கு 500 மணி நேரம் அனுபவம் வேண்டும் என்றும் புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது. 

இதுபற்றி ஜெட் ஏர்வேஸ் செய்தி தொடர்பாளர் கூறும்போது, ‘’எங்கள் நிறுவனத்தில் 5 போயிங் விமானங்கள் உள்ளன. அவை அனைத்தும் இப்போது நிறுத்தப்பட்டு விட்டது. போயிங் நிறுவனத்திடம் தொடர்பு கொண்டுள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிங்கப்பூரும் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை தரையிறக்க உத்தரவிட்டுள்ளது. 

எத்தியோப்பிய விபத்து குறித்து போயிங் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், ’’விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். ‘போயிங் 737 மேக்ஸ்-8' ரக விமானத்தை இயக்கும் விமானிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் எதுவும் வழங்கத் தேவையில்லை’’ என்று தெரிவித்துள்ளது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close